வயதான தமிழ் அறிஞர்கள் - உதவித்தொகை பெற ஆகஸ்ட் இறுதிக்குள் விண்ணப்பிக்கலாம் : வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தகவல்

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வயதான தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பக்கலாம் என ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ் வளர்ச்சி துறை சார்பில் வயதான தமிழ் அறிஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டு தோறும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில், 2021-22-ம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் தற்போது வரவேற்கப்படுகின்றன.

எனவே, 2021-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதியை கணக்கில் கொண்டு 58 வயது பூர்த்தியடைந்த தமிழ் அறிஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்குள் இருக்க வேண்டும். அந்தந்த வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆன்லைன் மூலம் வருமானச்சான்று, தமிழ்ப்பணி செய்தமைக்கான ஆதாரம், தகுதிநிலைச்சான்று, தமிழ் அறிஞர்கள் 2 பேரிடம் பெற்றப்பட்ட விண்ணப்பம் ஆகியவற்றை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பப் படிவங்களை நேரிலோ அல்லது தமிழ் வளர்ச்சி துறையின் வலைதளத்தில் (www.tamilvalarchithurai.com) இலவசமாக பதவிறக்கம் செய்து கொள்ளலாம். உதவித்தொகையாக ரூ.3,500, மருத்துவப்படி ரூ.500 வழங்கப்படும். இது தொடர்பான விவரம் தேவைப்படுவோர் 0416-2256166 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘அ’ பிரிவுக்கட்டடத்தில் உள்ள 4-ம் தளம், அறை எண் 421-ல் செயல்பட்டு வரும் மாவட்ட தமிழ் வள்ரச்சித்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் 31-ம் தேதிக்குள் வழங்க வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE