ராணிப்பேட்டை பெல் பிரிவு தலைவராக ராஜீவ் சிங் பொறுப்பேற்பு :

By செய்திப்பிரிவு

ராணிப்பேட்டை பெல் பிரிவு தலைவராக ராஜீவ்சிங் பொறுப்பேற்றுக்கொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் பாரத் ஹெவி எலெக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் இயங்கி வருகிறது. பொதுத்துறை பொறியியல் மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பொது மேலாளர் (பொறுப்பு) மற்றும் ராணிப்பேட்டை பெல் பிரிவு தலைவராக ராஜீவ்சிங் (56) பொறுப்பேற்றார்.

இவர், உத்தரபிரதேச மாநிலம், நொய்டாவில் டிரான்ஸ்மிஷன் நிறுவனத்தின் பிசினஸ் குழுமத்தின் பொது மேலாளராக (பொறுப்பு) பதவி வகித்துள்ளார். கடந்த 2018-2019-ம் ஆண்டுகளில் விசாகப்பட்டினத்தில் உள்ள பெல் ஹெவி பிளேட்ஸ் அண்ட் வெசல்ஸ் ஆலையின் யூனிட் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.

இந்நிலையில், ராணிப்பேட்டை பெல் பிரிவு தலைவராக ராஜீவ்சிங் தற்போது பொறுப்பேற்றுள்ளார். இவர், போபாலில் உள்ள மவுலானா ஆசாத் தேசிய தொழில் நுட்ப நிறுவனம்,மவுலானா ஆசாத் தேசிய தொழில்நுட்பக்கழகத்தில் மெக்கானிக்கல் பொறியியல் பட்டம் பெற்றுள்ளார்.

மேலும், புதுடெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசிய திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் நிதி நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்றுள்ளார். கடந்த 1988-ம் ஆண்டு பெல் கார்ப்பரேட் அலுவலகத்தில் பொறியியல் பிரிவில் பயிற்சியாளராக பணியில் சேர்ந்த ராஜீவ்சிங் 2 ஆண்டுகளுக்கு பிறகு போபால் பகுதியில் உள்ள பெல் பிரிவுக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தனது பணிக்காலத்தில் ஹைட்ரோ டர்பைன் பொறியியல், இழுவை மோட்டார் உற்பத்தி, நீர் விசையாழி உற்பத்தி, டபிள்யூ.டி.எம் திட்டமிடல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் பல முக்கிய பதவிகளில் ராஜீவ்சிங் பணியாற்றியுள்ளார். கடந்த 2015-ம் ஆண்டில் இருந்து 2018-ம் ஆண்டு வரை போபால் பெல் பிரிவில் பொதுமேலாளராக (ஹைட்ரோ) பணியாற்றிய ராஜீவ்சிங் தற்போது ராணிப்பேட்டை பெல் பிரிவு தலைவராக பணியமர்த்தப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்