அண்ணாமலையார் கோயிலில் கொடியேற்றம் :

By செய்திப்பிரிவு

அண்ணாமலையார் கோயிலில் ஆனி பிரம்மோற்சவ விழாவை யொட்டி 63 அடி உயர தங்க கொடிமரத்தில் வேதமந்திரங்கள் முழங்க சிவாச்சாரி யார்கள் நேற்று கொடியேற்றினர்.

தி.மலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுக்கு நான்கு முறை கொடியேற்றம் நடைபெறும். இதில், சூரியன் வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நகரும் காலமான ஆடி மாதத்தை வரவேற்கும் விதமாக தட்சிணாயின புண்ணிய கால கொடியேற்றும் விழா நேற்று நடைபெற்றது. வரும் 10 நாட்களுக்கு ஆனி பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. பத்தாம் நாளான வரும் 16-ம் தேதி தீர்த்தவாரியுடன் விழா நிறைவு பெறும்.

ஆனி பிரம்மோற்சவத்தை யொட்டி கோயில் நடை நேற்று அதிகாலை 5 மணியளவில் திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமலை அம்மனுக்கு சிறப்புஅபிஷேக ஆராதனைகள் நடை பெற்றன.

சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார், உண்ணா மலையம்மன், பராசக்தி அம்மன், விநாயகர் உற்சவர்கள் கோயில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். காலை 6 மணியளவில் சிவாச்சாரி யார்கள் வேத மந்திரங்கள் முழங்க 63 அடி உயரம் கொண்ட தங்க கொடிமரத்தில் பிரம்மோற்சவ கொடியை ஏற்றினர். அப்போது, பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் கொடிமரம், சுவாமியை தரிசனம் செய்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்