பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த தவறியதாக மத்திய அரசை கண்டித்து கோவை மாவட்ட மோட்டார் வாகன ஓட்டுநர்கள், உரிமையாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் இணைந்த சாலை போக்குவரத்து ஒருங்கிணைப்பு குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு பிஎம்எஸ் தொழிற்சங்கத்தின் நிர்வாகி நாகராஜ் தலைமை வகித்தார். சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சிஐடியு சாலை போக்குவரத்து சம்மேளன பொது செயலாளர் எஸ்.மூர்த்தி, ஏஐடியுசி, எம்எல்எஃப், சிஐடியு அரசு போக்குவரத்து தொழிலாளர் சங்கம், ஆட்டோ தொழிலாளர் சங்க நிர்வாகிகள் ஆகியோர் பேசினர்.
திருப்பூர் குமரன் நினைவகம் முன்பு சிஐடியு மோட்டார் வாகனத் தொழிற்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மோட்டார் சங்கத் தலைவர் விஸ்வநாதன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் கார் மற்றும் ஆட்டோவை கயிறு கட்டி இழுத்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும், வாகனங்களுக்கான காப்பீட்டுகட்டண தவணைகளை செலுத்த மத்திய அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago