சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன கொடியேற்றம் : கரோனா தடுப்புக்காக பக்தர்கள் இன்றி நடந்தது

சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆனித் திருமஞ்சன கொடியேற்ற நிகழ்வு நேற்று நடந்தது. கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் பக்தர்கள் இன்றி இந்நிகழ்வு நடைபெற்றது-

சிதம்பரம் நடராஜர் கோயிலில்ஆண்டு தோறும் மார்கழி மாத ஆருத்ரா தரிசன விழாவும், ஆனித்திருமஞ்சன தரிசன விழாவும் நடைபெறும். இந்த ஆண்டுக்கான ஆனித்திருமஞ்சன தரிசன விழா கொடியேற்றம் நேற்று காலை நடைபெற்றது. மேளதாளம் முழுங்க உற்சவ ஆச்சாரியார் கனகசபேச தீட்சிதர் கோயில் கொடி மரத்தில் கொடியேற்றினார்.

கரோனா தொற்று பரவல் காரண மாக மாவட்ட நிர்வாகம் கொடியேற்று நிகழ்ச்சியில் பக்தர்கள் பங்கேற்க தடை விதித்திருந்தது. இதன்படி பக்தர்கள், கொடியேற்றத்தின் போது கோயிலுக்குள் அனுமதிக்கப் படவில்லை. கோயிலின் பிரதான வாயிலான கீழ சன்னதி பகுதியில் சிதம்பரம் டிஎஸ்பி ரமேஷ் ராஜ் தலைமையில் 150க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர். கீழ வீதியில் பல்வேறு இடங்களில் போலீஸார் தடுப்புகட்டை அமைத் திருந்தனர். கொடியேற்றம் முடிந்த பிறகு கோயிலுக்குள் பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனர்.

வரும் 14-ம் தேதி தேர் திருவிழாவும், 15-ம் தேதி முக்கிய திருவிழாவான தரிசன விழாவும் நடைபெற உள்ளது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் பொதுதீட்சிதர்கள் செய்து வருகின்றனர். கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக திருவிழாக்கள் கோயிலுக்குள்ளேயே நடத்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்