நான்குவழிச் சாலை மேம்பாலத்தில் பராமரிப்பு பணி - கப்பலூர் டோல்கேட்டில் கட்டாய வசூலால் மீண்டும் பிரச்சினை :

By ஒய்.ஆண்டனி செல்வராஜ்

திருமங்கலம் அருகே கப்பலூர் டோல்கேட்டில் மீண்டும் அடாவடி வசூல் தொடங்கியுள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை அருகே திருநெல் வேலி, விருதுநகர் செல்லும் என்.எச்-7 நான்குவழிச் சாலையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையகம் சார்பில் கப்பலூர் டோல்கேட் உள்ளது. இந்த டோல்கேட்டில் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

திருமங்கலம், பேரையூர் தாலுகாவில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கிராம மக்களும் இந்த டோல்கேட்டை கடந்து செல்ல கட்டணம் வசூலிப்பதாக ஆதங்கப்படுகின்றனர். கப்பலூர் டோல்கேட்டில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்திருப்பதால் ஆம்புலன்ஸ்கள் கூட அவசரத் துக்கு செல்ல முடிய வில்லை.

அருகில் உள்ள கிராமங் களுக்குச் செல்ல கட்டணம் வசூல், பாஸ்ட் டாக் வந்தும் நீண்ட வரிசையில் காத்திருப்பு உள்ளிட்ட பிரச்சினைகளால் டோல் கேட் ஊழியர்களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருகிறது.

விதிமுறைகளை மீறி திரு மங்கலம் நகராட்சிக்குள் இந்த டோல்கேட் அமைத்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

கடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ஒத்தக்கடையில் நடந்த திமு கவின் ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ நிகழ்ச்சிக்கு வந்தி ருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலினிடம் பொதுமக்கள் டோல்கேட் பிரச்சினை தொடர்பாக நேரில் முறையிட்டனர்.

அப்போது பதிலளித்த ஸ்டா லின், ‘‘மாநிலம் முழுவதும் முறையில்லாமல் மத்திய, மாநில அரசுகள் டோல்கேட்களை அமைத்துள்ளதால் மக்கள் சாலைகளை கடந்து செல்ல முடியாமல் சிரமப்படுகின்றனர். திமுக ஆட்சிக்கு வந்ததும் டோல் கேட் பிரச்சினைக்கு முடிவு கட்டப்படும்” என்றார்.

ஆனால், தற்போது திமுக ஆட்சிக்கு வந்தபிறகும் வழக்கம்போல கப்பலூர் டோல்கேட்டில் சட்ட விரோதக் கட்டண வசூல் தொடர்கிறது.

இந்நிலையில் கப்பலூர் டோல்கேட்டை தாண்டியதும், திருநெல்வேலி செல்லக்கூடிய நான்கு வழிச்சாலை மேம்பா லத்தில் சாலை அமைக்கும் பணி நடக்கிறது. அதனால், திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர் செல்லக்கூடிய கனரக வாகனங்கள், கார்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் திருமங்கலம் ஊருக்குள் திருப்பி விடப்படுகின்றன.

அதனால், நான்குவழிச் சாலையில் விரைவாக செல்ல முடியாமல் வாகனங்கள், திரு மங்கலம் ஊருக்குள் குறுகிய சாலைகளில் நெரிசலில் சிக்கி திணறி வருகின்றன. இதனால் பயண நேரம் கூடுதலாக ஆகி றது.

திருமங்கலம் பகுதியில் உள்ள இந்த நான்கு வழிச் சாலையில் ஊருக்குள் செல் லாமல் வாகனங்கள் விரைவாக செல்வதற்கே கப்பலூர் டோல் கேட்டில் ரூ.85 கட்டணம் செலுத் துகின்றனர்.

தற்போது இந்தச் சாலையை வாகன ஓட்டிகள் பயன்படுத்தாமல் ஊருக்குள் செல்வதற்கும் கப்பலூர் டோல்கேட்டில் வழக்கம்போல் ரூ.85 வசூல் செய்கின்றனர்.

அதனால், டோல்கேட் ஊழியர் களுக்கும், பொதுமக்களுக்கும் அடிக்கடி முன்புபோல பிரச்சினை ஏற்பட்டு வருகிறது. அதனால் மாவட்ட நிர்வாகம் இப்பிரச்சினை குறித்து முதல்வர் கவனத்துக்கு கொண்டு சென்று பிரச்சினையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்