இரண்டு மாதங்களுக்கு பிறகு - பொய்கை மாட்டு சந்தை திறப்பு :

By செய்திப்பிரிவு

வேலூர் அருகேயுள்ள பொய்கை கிராமத்தில் செயல் படும் வாரச்சந்தை மாடுகள் விற்பனைக்கு மிகவும் பிரபல மானது. ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை தினத்தில் நடைபெறும் சந்தையில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, சித்தூர், கிருஷ்ணகிரி, தி.மலை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து மாடுகளை விற்கவும், வாங்கவும் விவசாயிகளும் வியாபாரிகளும் வந்து செல்கின்றனர். இங்கு, மாடுகள் மட்டுமின்றி கோழி விற்பனையும் காய்கறி, மாடுகளுக் கான கயிறுகள் உள்ளிட்டவை விற்பனையும் அதிகமாக நடைபெறும்.

கரோனா இரண்டாம் அலை ஊரடங்கால் மூடப்பட்ட பொய்கை மாட்டு சந்தை, ஊரடங்கு தளர்வால் இரண்டு மாதங்களுக்குப் பிறகு நேற்று முதல் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டது. பொய்கை சந்தை திறக்கப்படும் தகவலை அடுத்து நேற்று முன்தினம் இரவே வெளியூர்களில் இருந்து ஏராளமான மாடுகளை விவசாயிகள் வாகனங்களில் கொண்டு வந்து இறக்கினர். 2 மாதங்களுக்குப் பிறகு சந்தை திறக்கப்பட்டதால் வியாபாரிகளும் விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்