திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மலைவாழ் மக்கள் அச்சமின்றி - கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் : ஆட்சியர் அமர் குஷ்வாஹா வேண்டுகோள்

By செய்திப்பிரிவு

மலைவாழ் மக்கள் கரோனா தடுப்பூசியை அச்சமின்றி போட்டுக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்ட மலைவாழ் மக்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் புதூர் நாடு மலைப்பகுதியில் உள்ள வனத்துறை அரசு மேல்நிலைப் பள்ளியில் நேற்று தொடங்கியது. மாவட்ட சுகாதாரத்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த முகாமுக்கு சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் செந்தில் முன்னிலை வகித்தார். முன்னதாக வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தர்யா வரவேற்றார்.

மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து தடுப்பூசி முகாமை தொடங்கி வைத்து, மலைவாழ் மக்கள் அனைவரும் அச்சமின்றி தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்பதால் முன் உதாரணமாக 2-ம் தவணை கரோனா தடுப்பூசியை மலைவாழ் மக்கள் முன்னிலையில் ஆட்சியர் போட்டுக் கொண்டார்.

பின்னர், அவர் பேசும்போது, ‘‘ஜவ்வாதுமலையில் உள்ள புதூர்நாடு, புங்கம்பட்டு நாடு, நெல்லிவாசல்நாடு ஆகிய ஊராட்சிகளில் 32 குக்கிராமங்கள் உள்ளன. இங்கு, 26 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். கரோனா 2-வது அலையில் மலைவாழ் மக்களை பாதுகாக்க பழங்குடியின மாணவிகள் தங்கும் விடுதியில் கரோனா சிறப்பு மையம் அமைக் கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றில் இருந்து மீளவே தடுப்பூசிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்தில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. திருப்பத்தூர் மாவட்டத்திலேயே மலை கிராமங்களில் புதூர்நாடு பகுதியைச் சேர்ந்தவர்கள் தான் மிகவும் குறைவாக 643 பேர் மட்டுமே தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனர். 15 ஆயிரம் பேர் வசித்து வரும் இப்பகுதியில் இந்த எண்ணிக்கையானது மிகவும் குறைவானதாகும்.

தடுப்பூசி மீது மலை கிராம மக்கள் அச்சம் கொண்டுள்ளனர். இதை போக்கவே நான் தற்போது உங்கள் முன்னிலையில் 2-ம் தவணை தடுப்பூசியை போட்டுக் கொண்டேன். தடுப்பூசி மீது பொதுமக்கள் அச்சப்படத் தேவை யில்லை. எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது.

உடல் சார்ந்த பிரச்சினைகள் ஏற்கெனவே இருந்தால் அருகே யுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று மருத்து வர்களிடம் ஆலோசனை பெற்றுக்கொண்டு தடுப்பூசியை போட்டுக் கொள்ளலாம். 18 வயது நிரம்பியவர்கள் கட்டாயமாக தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். கரோனா பெருந் தொற்றில் இருந்து தடுப்பூசியே அனைவரையும் பாதுகாக்கும்.

அதேபோல, மாற்றுத் திறனாளிகள் மற்றும் கர்ப்பிணி களும் தவறாமல் தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். இதற்காக, சிறப்பு முகாம் பல்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது. இதை மக்கள் பயன் படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்றார்.

இதைத்தொடர்ந்து, புதூர்நாடு மலைப்பகுதியில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஆட்சியர் அமர் குஷ்வாஹா ஆய்வு நடத் தினார். அப்போது, ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடிநீர், கால்வாய் வசதியை செய்து தர வேண்டும் என மருத்துவர்கள் கோரிக்கை விடுத்தனர். உடனே, நடவடிக்கை எடுப்பதாக ஆட்சியர் உறுதியளித்தார்.

இந்நிகழ்ச்சியில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோமேதகம், சித்ரகலா, மருத்து வர்கள் ரமேஷ், வெங்கட்ராமன், செவிலியர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்