தொடர் மழையால் அடுக்கம் மலை சாலையில் போக்குவரத்துக்கு தடை :

By செய்திப்பிரிவு

அடுக்கம் மலைச்சாலை கொடைக்கானலுக்கு மாற்றுப் பாதையாக உள்ளது. அகலம் குறைவான இச்சாலையில் அடிக்கடி மண் சரிவு ஏற்பட்டு பாறைகள் உருண்டு விழுவதால் ஆங்காங்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு சாலை அகலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இப்பகுதியில் தினமும் மழை பெய்து வருகிறது. இதனால் மண்ணின் பிடிப்புத் தன்மை குறைந்து, ஆங்காங்கே சாலைகளில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. எனவே இப்பகுதியில் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள், மலைகிராம மக்களின் போக்குவரத்துக்காக இருசக்கர வாகனம் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்