அரியலூரை அடுத்த இலுப்பையூர் கிராமத்திலுள்ள வேங்கன் ஏரியில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்' திட்டத்தின் கீழ் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய மதகுகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இதில், மாநில பிற்படுத் தப்பட்டோர் நலத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பங்கேற்று, பணிகளை தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து, திருமானூர் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருள்களை வழங்கி, குறுவை சாகுபடி தொகுப் புத் திட்டத்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், “அரியலூர் மாவட்டத்தில் 4,875 ஏக்கர் பரப்பளவில் ரூ.70.29 லட்சம் மதிப்பீட்டில் குறுவை சாகு படி தொகுப்புத் திட்டம் செயல் படுத்தப்படுகிறது” என்றார்.
இந்நிகழ்ச்சிகளுக்கு, ஆட்சியர் பெ.ரமணசரஸ்வதி தலைமை வகித்தார். அரியலூர் எம்எல்ஏ கு.சின்னப்பா, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் பொ.சந்திரசேகர், வேளாண்மை இணை இயக்குநர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
பேருந்தை ஓட்டிய அமைச்சர்
தொடர்ந்து, ஆனந்தவாடி கிராமத்திலிருந்து ஜெயங்கொண் டத்துக்கு கூடுதல் அரசுப் பேருந்தை தொடங்கி வைத்த அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், சிறிது தூரம் பேருந்தை அவரே ஓட்டிச் சென்றார். இந்நிகழ்ச்சியில், எம்எல்ஏ கு.சின்னப்பா, போக்கு வரத்துக் கழக துணை மேலாளர் சதீஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago