2 மாதங்களுக்குப் பிறகு திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்துக்கு நேற்று மனுக்களை அளிக்க பொதுமக்கள் குவிந்ததால், ஆட்சியர் அலுவலக சாலை பரபரப்புடன் காணப்பட்டது.
கரோனா 2-வது அலை பரவலைத் தொடர்ந்து, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் கடந்த 2 மாதங்களுக் கும் மேலாக, திங்கள்கிழமை தோறும் நடைபெறும் மக்கள் குறைதீர் கூட்டம் ரத்து செய்யப் பட்டுள்ளது. தற்போது கரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக் கப்பட்டுள்ளதால், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெறும் என்ற எண்ணத்தில், கோரிக்கை மனு அளிப்பதற்காக பொதுமக்கள் திரளானோர் நேற்று ஆட்சியர் அலுவலகத்தில் குவிந்தனர். இதனால், 2 மாதங்களுக்குப் பிறகு ஆட்சியர் அலுவலகச் சாலை மக்கள் கூட்டத்தால் பரபரப் புடன் காணப்பட்டது.
ஆனால், மக்கள் குறைதீர் கூட்டம் நேற்று நடைபெறாத நிலை யில், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீஸார், மனு அளிக்க வந்த அனைவரையும் விசாரித்து, அதன்பிறகே உள்ளே செல்ல அனுமதித்தனர். பிரச்சினையின் அடிப்படையில் கோரிக்கை மனுக் களை ஆட்சியர் சு.சிவராசு நேரில் பெற்றுக் கொண்டார்.
பல்நோக்கு மருத்துவ உதவி பணியாளர்கள் மற்றும் ஆய்வக நுட்பநர்கள் அளித்த மனுவில், “திருச்சி அரசு மருத்துவமனையில் கரோனா பரவல் தடுப்புப் பணியில் கடந்தாண்டு ஜூலை 13-ம் தேதி முதல் 63 பேர் பணிபுரிந்து வந்தோம். தற்போது பணிக்கு வர வேண்டாம் என மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறுகின்றனர். நாங்கள் தொடர்ந்து பணியில் ஈடுபட நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
கிராமக் கோயில் பூசாரிகள் பேரவை சார்பில், “பூசாரிகள் அனைவருக்கும் கரோனா உதவித் தொகை வழங்க வேண்டும். மாத ஊக்கத் தொகை வழங்க வேண்டும். கோயில் அறங்காவலர் குழுவில் அர்ச்சகர், பட்டாச்சாரியார்கள், கிராமக் கோயில் பூசாரிகள் ஆகி யோரை இணைக்க வேண்டும்” என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி மனு அளித்தனர்.
3-வது வாரமாக காணொலியில்...
கரூர் ஆட்சியர் அலுவலகத்தில், ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை யில் 3-வது வாரமாக நேற்று காணொலி வாயிலாக மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. பொதுமக்கள் 25 பேர், அவரவர் வீட்டிலிருந்தபடியே காணொலி வாயிலாக கூட்டத்தில் பங்கேற்றனர்.இதில், கவுண்டம்பட்டி சுப்பிர மணியன் பேசியபோது, “காவிரி ஆற்றின் குறுக்கே மேகேதாட்டு வில் கர்நாடக அரசு அணை கட்டு வதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும்” என்றார். இதேபோல, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்கள் பேசினர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago