தி.மலை மின் பகிர்மான வட்டத்தில் - 381 புதிய கேங்மேன் பணியாளர்களுக்கு அறிமுக பயிற்சி : மேற்பார்வை பொறியாளர் காளிமுத்து தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் பணியமர்த்தப்பட்டுள்ள 381 கேங்மேன் பணியாளர்களுக் கான 2 நாள் அறிமுக பயிற்சி முகாம் திருவண்ணாமலையில் நேற்று தொடங்கியது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில், திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் புதிதாக 381 கேங்மேன் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான 2 நாள் அறிமுக பயிற்சி முகாம் திருவண்ணாமலை தொழில்நுட்ப பயிற்சி மற்றும் மேம்பாட்டு மையத்தில் நேற்று தொடங்கியது. மின்வாரிய மேற் பார்வை பொறியாளர் காளிமுத்து தலைமை வகித்து தொடங்கி வைத்தார். திருவண்ணாமலை மின் பகிர்மான வட்டத்தில் உள்ள 381 கேங்மேன் பணியாளர்களும் 15 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா 2 நாட்கள் பயிற்சி அளிக்கப்பட வுள்ளது.

மின்சாதனங்கள், மின் பாதுகாப்பு, மின்பாதைகளை சரியாக அமைக்கும் முறை மற்றும் பராமரிக்கும் முறை, முதலுதவி, விபத்து தவிர்த்தல், நுகர்வோர் திருப்தி, மின் தடங்கலை விரைந்து சரி செய்தல் குறித்து செய்முறையுடன் பயிற்சி அளிக்கப்படுகிறது. கரோனா தொற்று பரவல் தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை கடைபிடித்து பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் இறுதிக் குள் அனைவருக்கும் பயிற்சிஅளித்து முடிக்க திட்டமிடப்பட் டுள்ளது. பயிற்சிக்கான ஏற்பாடுகளை தொழில்நுட்ப பயிற்சி மைய பொறி யாளர்கள் மற்றும் பணியாளர்கள் செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்