மார்க்கண்டேய நதி விவகாரம்: விவசாய சங்கம் கண்டனம் :

By செய்திப்பிரிவு

கர்நாடக அரசு பெண்ணையாற்றில் புதிய அணை கட்டியுள்ளது குறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்ட செயலாளர் மாதவன் வெளியிட்டுள்ள அறிக்கை:

கரோனா ஊரடங்கை பயன்படுத்தியும், முந்தைய அதிமுக அரசின் செயலற்ற தன்மை காரணமாகவும், கர் நாடக அரசு தென்பெண்ணை ஆற்றின் மார்க்கண்டேய நதியில் தடுப்பணையை மதகு கள் கூட இல்லாமல் கட்டி முடித்துள்ளனர். இதில் 50 மீட்டர் உயரத்திற்கு மேல் நீர்வழிந்தால் தான் வட தமிழகத்திற்கு நீர்வர இயலும். இதனால் கிருஷ்ணகிரி கே.ஆர். அணைக்கு தண்ணீர் வருவது என்பது கானல் நீரே. கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்கள் நீரின்றி விவசாயம் பாதிக்கும் அபாயம் ஏற்படும்.

கடலூர் மாவட்டத்தில் பண்ருட்டி அண்ணாகிராமம், கடலூர் பகுதியிலும் பாசனமும் நிலத்தடி நீரும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு உடனடியாக உண்மை தன்மைகளை ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்