சிவகங்கையில் மேலூர் சாலையில் அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கவுரி விநாயகர் கோயிலுக்கு 142 ஏக்கர் நிலம் உள்ளது. இதில் ரூ.10 கோடி மதிப்புள்ள 9.58 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் பாஸ்கரனின் உறவினர் ஆக்கிரமித்து வணிக வளாகம் கட்டியதாகப் புகார் எழுந்தது.
இதையடுத்து அந்த இடத்தை மீட்டு வணிக வளாகக் கட்டிடத்தை அறநிலையத் துறை அதிகாரிகள் அகற்றினர். இப்பிரச்சினையில் நடவடிக்கை எடுக்காத கவுரி விநாயகர் கோயில் செயல் அலுவலர் நாகராஜன் இடமாற்றம் செய்யப்பட்டார். புதிய செயல் அலுவலராக ஞானசேகரன் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையே கவுரி விநாயகர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் ஏற்கெனவே ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட குடியிருப்புகள், கடைகளை அகற்ற அறநிலையத் துறை அதிகாரிகள் 34 பேருக்கு நோட்டீஸ் கொடுத்துள்ளனர்.
இதில் முதற்கட்டமாக 13 ஆக்கிரமிப்பு கள் அகற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இது குறித்து அறநிலையத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘13 ஆக்கிரமிப்புகள் விரைவில் அகற்றப்படும்’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago