நீட் தேர்வு விவகாரத்தில் திமுக வின் மீது பழிபோட வேண்டும் என்பதற்காகவே பாஜக நீதிமன் றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது என திமுக செய்தித் தொடர் பாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியது: ஒற்றுமையை குறிக்கும் சொல் தான் ஒன்றியம். மத்திய அரசை ஒன்றிய அரசு என்று கூறுவதில் தவறில்லை. இதை ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்து வரு கிறார். அவரைப் பொறுத்தவரை பாஜகவுக்கு விசுவாசமாக இருந்து, தனது மகனை எப்படியாவது மத்திய அமைச்சராக்க வேண்டும் என்பதுதான்.
திமுகவைப் பொறுத்தவரை தேர்தல் அறிக்கையை முழுமை யாக நிறைவேற்றும்.
திமுகவின் மீது பழிபோட வேண்டும் என்பதற்காகவே நீட் தேர்வு விவகாரத்தில் பாஜக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்குப் பெற வேண்டும் என்பதுதான் திமுகவின் நிலைப்பாடு. அதை அடைவதற்கு அனைத்து வகையான நடவடிக் கைகளையும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மேற்கொள்வார் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago