தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தில் உள்ள சிற்பக்குளக்கரையில் மரக்கன்றுகள் நடும் பணியை கூடுதல் ஆட்சியர் பிரதாப் நேற்று தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த கீழ்ராவந்தவாடி கிராமத்தில் வரலாற்று சிறப்பு மிக்க சிற்பக் குளம் உள்ளது. கலவை சிற்பங்கள் நிறைந்த குளத்தை புராதான சின்னமாக தொல்லியல் துறை அறிவித்தது.
இந்நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் 250 மரக்கன்றுகள் நட ஊராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதை யடுத்து, மரக்கன்றுகள் நடும் பணியை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநரும் கூடுதல் ஆட்சியருமான பிரதாப் நேற்று தொடங்கி வைத்தார். மரக்கன்றை நட்டு தண்ணீரை ஊற்றினார். இதைத்தொடர்ந்து, புங்கன், கொய்யா, வேம்பு, தேக்கு, நெல்லி உள்ளிட்ட பல்வேறு மூலிகை செடிகள் நடப்பட்டன.
பின்னர் கூடுதல் ஆட்சியர் பிரதாப் கூறும்போது, “வரலாற்றுச் சிறப்புமிக்க சிற்ப குளத்தை மாவட்ட நிர்வாகம் முழுமையாக பராமரித்து வருகிறது. இக்குளத்தை சுற்றி மரங்களை வளர்த்து பசுமையான சூழலை உருவாக்க ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது” என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துக்குமாரசாமி, உதவி ஆட்சியர் (பயிற்சி) ரவி தேஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago