சிவகங்கை நகராட்சியில் - தூய்மை பணியாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ.40 லட்சம் மாயம் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை நகராட்சியில் தூய் மைப் பணியாளர்கள் ஊதியத்தில் பிடித்தம் செய்த ரூ.40 லட்சம் மாயமானதாக புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை நகராட்சியில் பணிபு ரியும் தூய்மைப் பணியாளர்களில் 80 பேர் நிரந்தரமாகவும், 85 பேர் ஒப்பந்தம் முறையிலும் உள்ளனர். நிரந்தரப் பணியாளர்கள் நகராட்சி, பேரூராட்சி பணியாளர்கள் கூட் டுறவு சிக்கன நாணயச் சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர். இதில் 60 பேருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் ரூ.2 கோடிக்கு மேல் கடன் வழங்கப்பட்டது.

இதையடுத்து கடன் தவணைத் தொகையை நகராட்சி நிர்வாகம் பணியாளர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்து, கூட்டுறவுச் சங்கத்தில் செலுத்தி வருகிறது. ஓராண்டுக்கு முன் தூய்மைப் பணியாளர்களிடம் பிடித்தம் செய்த கடன் தவணைத் தொகையை முறையாகச் செலுத்தவில்லை.

இதனால் கூட்டுறவுச் சங் கத்துக்கு ரூ.40 லட்சம் வரை பாக்கி வைக்கப்பட்டுள்ளது. கடன் நிலுவைத் தொகை இருப் பதால் பணியாளர்களுக்குக் கடன் வழங்குவதை கூட்டுறவுச் சங்கம் நிறுத்தியது. இதனால் பணி யாளர்கள் கடன் பெற முடியாமல் சிரமப்படுகின்றனர்.

இது குறித்து சிஐடியு மாவட்டச் செயலாளர் வீரையா கூறுகையில், ‘பணியாளர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.40 லட்சம் குறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டால், அந்தத்தொகை எங்கே போச்சு என்றே தெரியவில்லை என்று கூறுகின்றனர்.

மாயமான ரூ.40 லட்சத்தை மீட்டு கூட்டுறவுச் சங்கத்தில் செலு த்த வேண்டும்.

இல்லாவிட்டால் ஜூலை 13-ல் நகராட்சி அலுவலகம் முன் காத்திருக்கும் போராட்டம் நடைபெறும்,’ என்றார்.

நகராட்சி ஆணையர் அய் யப்பன் கூறுகையில், ‘பணியாளர்களிடம் பிடித்தம் செய்த கடன் தவணைத் தொகை செலுத்தாதது நான் பொறுப்பேற்பதற்கு முன்பாக நடந்தது. நான் பொறுப்பேற்றதில் இருந்து பிடித்தம் செய்த தொ கையை முறையாகச் செலுத்தி வருகிறோம். விரைவில் விடு பட்ட தொகையைச் செலுத்த நட வடிக்கை எடுக்கப்படும், என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்