திண்டுக்கல் அருகே - பள்ளி ஆசிரியை வீட்டில் 22 பவுன் கொள்ளை :

By செய்திப்பிரிவு

திண்டுக்கல் அருகே அரசு பள்ளி ஆசிரியை வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி 22 பவுனை கொள்ளையடித்துச் சென்றனர்.

திண்டுக்கல் அருகே சென்னமநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அருந்ததி (55). இவர், ஒட்டன்சத்திரத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் பழனி (57), ஓய்வு பெற்ற அரசு அதிகாரி. நேற்று முன்தினம் இரவு வீட்டின் முன்பக்கக் கதவை பூட்டிய நிலையில், காற்றுக்காக வீட்டின் பின்பக்கமுள்ள கதவை திறந்து வைத்து கணவனும், மனைவியும் தூங்கியுள்ளனர். இவர்களது மகன் மாடியில் தூங்கி உள்ளார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் பின்பக்க வாசல் வழியாக வீட்டினுள் நுழைந்தனர். கத்தியை காட்டி மிரட்டி அருந்ததி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க செயின் மற்றும் பீரோவில் இருந்த 17 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

இது குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்