பயன்படுத்திய சமையல் எண்ணெயை பயோ டீசலாக மாற்றும் திட்டம் : பெரம்பலூர் ஆட்சியர் தொடங்கி வைத்தார்

By செய்திப்பிரிவு

பெரம்பலூர் மாவட்டத்தில் உண வகம், இனிப்பகங்களில் பயன் படுத்தப்பட்ட சமையல் எண் ணெயை வாங்கி பயோ டீசலாக மாற்றும் திட்டம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

பெரம்பலூர் ஆட்சியர் அலுவல கத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில், உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட சமையல் எண்ணெயை பயோடீசலாக மாற் றும் திட்டத்தை தொடங்கி வைத்த ஆட்சியர் ப. வெங்கடபிரியா பேசியது:

உணவகங்கள் மற்றும் இனிப் பகங்களில் ஒரு முறைக்கு மேல் மீண்டும் மீண்டும் அதே எண்ணெயைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் பொருட்களை உட்கொள்பவர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதய நோய், உடல் பருமன் போன்றவை ஏற்படுகின்றன.

எனவே, பெரம்பலூர் மாவட் டத்தில் முதல்கட்டமாக 50 உணவகம் மற்றும் இனிப்பகங் களிலிருந்து ஒருமுறை பயன் படுத்திய எண்ணெயை லிட்டர் ரூ.25 முதல் ரூ.30 வரை விலை நிர்ணயம் செய்து சேகரித்து, சுத்திகரிப்பு செய்ய உணவு பாதுகாப்புத் துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பெரம்பலூர், திருச்சி, புதுக் கோட்டை, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களிலிருந்து பயன் படுத்திய எண்ணெயை சேகரிக்க ரூகோ என்ற நிறுவனத்துக்கு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிறுவன அமைப்பு அனுமதி வழங் கியுள்ளது.

இதையடுத்து, முதலில் பெரம் பலூர் மாவட்டத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ரூகோ நிறுவனத்தினர் 4 மாவட்டங் களிலிருந்து பெறப்படும் பயன் படுத்தப்பட்ட எண்ணெயை பெங்களூரு எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பிவைத்து, பயோ டீசலாக சுத்திகரிப்பு செய்து, வாகன பயன்பாட்டுக்காக பிற எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்க உள்ளனர் என்றார்.

இந்நிகழ்ச்சியில், உணவு பாது காப்புத் துறை நியமன அலுவலர் எம்.கவிக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பி.சீனிவாசன், ஆர்.இளங்கோவன், பி.என்.ரவி, ரூகோ நிறுவன அலுவலர் கிஷோர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்