கிராமந்தோறும் ‘சைபர் கிளப்’ : மத்திய மண்டல ஐ.ஜி தகவல்

By செய்திப்பிரிவு

சைபர் குற்றங்களைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய மண்டலத்தில் கிராமங் கள் தோறும் ‘சைபர் கிளப்’ தொடங் கப்பட உள்ளது என மத்திய மண்டல ஐ.ஜி வி.பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் காவல் துறை சார்பில் கழிவுநீரை சுத்தி ரித்து தோட்டத்துக்கு தண்ணீர் பாய்ச்சும் திட்டத்தை நேற்று தொடங்கி வைத்ததுடன், மாவட்ட மனநல சிகிச்சை மையத்தை பார்வையிட்ட அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியது:

மத்திய மண்டலத்துக்கு உட்பட்ட மாவட்டங்களில மனநலம் பாதிக்கப்பட்டு சாலையோரம் சுற்றித் திரிந்த 50 பேர் மீட்கப்பட்டு, மனநல காப்பகத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சமூக நலத்துறை அலுவலர் களோடு இணைந்து காவல் துறையினரும் காப்பகங்களை கண்காணிப்பார்கள். சைபர் கிரைம் குற்றங்களை தடுப்பதற்காக மாவட்டந்தோறும் சைபர் கிரைம் குற்றத்தடுப்பு பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களை பயன்படுத்தி குற்றங்கள் அதிக அளவில் நடைபெற்று வருவதால், சைபர் குற்றங்களைத் தடுக்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும் மத்திய மண்டலத்தில் கிராமங் கள்தோறும் ‘சைபர் கிளப்’ தொடங்கப்பட உள்ளது என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்