ரயிலில் கடத்த முயன்ற42 கிலோ கஞ்சா பறிமுதல் :

By செய்திப்பிரிவு

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டிணத்தில் இருந்து கேரள மாநிலம் கொல்லம் நோக்கி நேற்று முன்தினம் இரவு புறப்பட்ட பயணிகள் விரைவு ரயில் நேற்று அதிகாலை ரேணிகுண்டா வழியாக காட்பாடி நோக்கி வந்து கொண்டிருந்தது. அங்கு, அந்த ரயிலில் காட்பாடி ரயில்வே பாதுகாப்புப் படை ஆய்வாளர் தேப்ராத் சத்பதி தலைமையிலான காவலர்கள் மற்றும் ரயில்வே குற்றப்புலனாய்வு பிரிவினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது, ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக்கிடந்த நான்கு பெரிய பைகளை பறிமுதல் செய்தனர். அந்த பையை பாதுகாப்புடன் பிரித்தபோது கஞ்சா பார்சல்கள் இருந்தன. அதை பறிமுதல் செய்த காவலர்கள் காட்பாடி ரயில் நிலையத்தில் வைத்து எடை பார்த்ததில் சுமார் 42 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, வேலூர் மாவட்ட போதைப் பொருள் நுண்ணறிவு பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் ஏ.டி.ராமச்சந்திரன் வசம் கஞ்சா பார்சலை ரயில்வே பாதுகாப்புப் படையினர் ஒப்படைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு சுமார் 8 லட்சம் என கூறப்படுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்