வாழ்நாள் சாதனையாளர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்’ :

By செய்திப்பிரிவு

மத்திய அரசின் ‘டென்சிங் நார்கே தேசிய சாகச விருது’ பெற தகுதி யானவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட் டுள்ள செய்திக்குறிப்பில், ‘‘கடந்த 2018 முதல் 2020-ம் ஆண்டுகளில் நிலம், நீர் அல்லது வான் வழியாக சாதனைகள் புரிந்து நாட்டுக்கு பெருமை தேடி தந்த சிறந்த வீரர்களுக்கு மத்திய அரசின் இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டு துறை சார்பில் ‘டென்சிங் நார்கே தேசிய சாகச விருது’ என்ற வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், 2020-ம் ஆண்டுக்கான தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் ஜூலை 5-ம் தேதிக்குள் http://dbtyas-youth.gov.in என்ற இணையதளம் மூலம் சமர்ப்பிக்க வேண்டும். ‘டென்சிங் நார்கே தேசிய சாகச விருதானது, வெண்கலச் சிலை, சான்றிதழ், விளையாட்டு வீரர்கள் அணியும் டையுடன் கூடிய மேல்சட்டை அல்லது சேலை மற்றும் விருதுக் கான தொகை ரூ.15 லட்சத்தை உள்ளடங்கியதாகும்.

இந்த விருது விளையாட்டு துறையில் வீரர்களுக்கு வழங்கப்படும் அர்ஜூனா விருதுக்கு நிகரான தாகும்.

விருது தொடர்பான விவரங் களில் மத்திய அரசின் முடிவே இறுதியானதாகும். இந்த விருது பெறுவதற்காக ஆதரவு திரட்டுவதோ அல்லது விண்ணப்பத்தை பின் தொடர்வதோ தெரியவந்தால் விண்ணப்பங்கள் நிராகரக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இந்த விருதுகள் பெற தகுதியானவர் களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது தொடர்பான மேலும்விவரம் பெற விரும்புவோர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் தொடர்பு கொள்ளலாம்’’ என தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை

வான்வெளி சாகசங்கள், நிலம் மற்றும் நீர் சாகசங்களில் சிறப்பாக திகழும் சிறந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்றுநர்களுக்கு டென்சிங் நார்கே விருது தேசிய விருது வழங்கப்படுகிறது.

இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. www.sdbtyas-youth-gov.inb என்ற இணையதளம் மூலமாக மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். இதற் கான கடைசி நாள் வரும் 5-ம் தேதியாகும். தபால் மூலம் அனுப்பப்படும் விண்ணப்பம் ஏற்றுக் கொள் ளப்படாது.

மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் அலுவல கத்தின் 04175 – 233169 என்ற தொலைபேசியை தொடர்பு கொள் ளலாம்” என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்