பழங்குடியின விவசாயிகளுக்கு ரூ.1.54 கோடி கடனுதவி : திருப்பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி வழங்கினார்

By செய்திப்பிரிவு

பழங்குடியின மலைவாழ் விவசாயி களுக்கு கூட்டுறவுத்துறை சார்பில், ரூ.1.54 கோடி கடனுதவியை திருப் பத்தூர் எம்எல்ஏ நல்லதம்பி நேற்று வழங்கினார்.

திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாதுமலைக்கு உட்பட்ட புதூர்நாடு, நெல்லிவாசல் நாடு, புங்கம்பட்டு நாடு ஆகிய 3 ஊராட்சிகளுக்கு உட்பட்ட மலைக் கிராமங்களில் விவசாயப் பணிகள் அதிக அளவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

புதூர்நாடு கிராமத்தில் இயங்கி வரும் கூட்டுறவு சங்கம் மூலம் 33 விவசாய கூட்டு பொறுப்புக் குழுக்களுக்கு விவ சாயக் கடன் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு துறை துணைப் பதிவாளர் கோதண்டராமன் தலைமை வகித்தார். கூட்டுறவு சங்கத் தலைவர் அண்ணாமலை வரவேற் றார். கூட்டுறவு சங்கச்செயலாளர் கோவிந்தன் முன்னிலை வகித்தார்.

திருவண்ணாமலை நாடாளு மன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, 330 விவசாயிகளுக்கு 1 கோடியே 54 லட்சம் கடனுதவியை விவசாயிகளுக்கு வழங்கினர்.

இதில், சட்டப்பேரவை உறுப் பினர் நல்லதம்பி பேசும்போது, ‘‘ஜவ்வாது மலைக்கு உட்பட்ட மலைக்கிராமங்களுக்கு தேவை யான சாலை வசதி, மின்விளக்கு வசதி, சுகாதாரம், பேருந்து உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தர அரசு நடவடிக்கை எடுக்கும். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் வளர்ச்சி பெற தொடர்ந்து பாடுபடுவோம்’’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் கிழக்கு ஒன்றியச்செயலாளர் திருப்பதி, கந்திலி வடக்கு ஒன்றியச்செயலாளர் அன்பழகன், மாவட்ட முன்னாள் கவுன்சிலர் அருணாச்சலம், உள்ளாட்சி முன்னாள் பிரதிநிதிகள் செல்வம், வில்வம், பழனி, அண்ணாமலை, வைகுந்தராவ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்