திருப்பத்தூர் அடுத்த காக்கணாம்பாளையத்தில் - புதிய நியாய விலை கடை திறப்பு :

By செய்திப்பிரிவு

திருப்பத்தூர் அடுத்த காக்கணாம்பாளையம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட நியாய விலை கடையை எம்பி அண்ணாதுரை, எம்எல்ஏ நல்லதம்பி ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் காக்கணாம்பாளையம் கிராமத்தில் புதிதாக நியாய விலை கட்டித் தர வேண்டும் என அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பியிடம் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.14 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய நியாய விலை கட்டிடம் கட்டுமானப்பணிகள் தொடங்கின.

இப்பணிகள் முடிவுற்று புதிய நியாய விலைக் கடை திறப்பு விழா காக்கணாம்பாளையத்தில் நேற்று நடைபெற்றது. திருப்பத்தூர் ஒன்றியச்செயலாளர் திருப்பதி முன்னிலை வகித்தார். திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, திருப்பத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் நல்லதம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு, புதிய நியாய விலை கடையை திறந்து வைத்தனர்.

நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சித்திரகலா, கோமேதகம், கூட்டுறவு சங்கத்தலைவர் தேவேந்திரன், ஊராட்சிச்செயலாளர் பூபதி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்