சிவகங்கை ஒன்றிய அலுவலகத் தில் டெண்டர் எடுப்பதில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் அதிகாரிகள் டெண்டரை பாதியில் நிறுத்தினர்.
சிவகங்கை ஒன்றிய அலுவலகத்தில் எம்எல்ஏ தொகுதி மேம்பாட்டு நிதி, 15-வது மத்திய நிதி குழு மானியப் பணிகள், தேசிய ரூர்பன் திட்டத்தில் ரூ.1.42 கோடிக்கு சாலை, பாலம், கட்டிடம் உள்ளிட்ட 14 பணிகளுக்கான டெண்டர் நேற்று நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். இதில் 47 பேர் டெண்டர் எடுக்க விண்ணப்பம் செய்திருந்தனர்.
இந்நிலையில் டெண்டர் எடுப்பதில் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து இருதரப்பினரும் ஒருவரையொருவர் தள்ளிவிட்ட தால் சலசலப்பு ஏற்பட்டது. அங்கிருந்த மற்ற ஒப்பந்ததாரர்கள் அவர்களை விலக்கி விட்டனர். அங்கு வந்த போலீஸார் கூட் டத்தை அப்புறப்படுத்தினர்.
இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதால் டெண்டரை அதிகாரிகள் பாதியில் நிறுத்தினர். தொடர்ந்து டெண்டர் வேறொரு நாளில் நடைபெறும் என வட்டார வளர்ச்சி அலுவலர் உமாமகேஸ்வரி அறிவித்தார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago