25% மாற்று எரிபொருளை பயன்படுத்தும் ரெட்டிப்பாளையம் சிமென்ட் நிறுவனம் :

By செய்திப்பிரிவு

அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத் தின் பிரிவான ரெட்டிப்பாளையம் சிமென்ட் ஒர்க்ஸ் நிறுவனம், தனது எரிபொருள் தேவையில் 25 சதவீதத்தை மாற்று எரிபொருட்கள் மூலம் பூர்த்தி செய்து வருகிறது.

இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஆதித்யா பிர்லா குழுமத்தின் அல்ட்ராடெக் சிமென்ட் நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிறுவனமான அரியலூர் மாவட்டம் ரெட்டிப்பாளையம் சிமென்ட் ஒர்க்ஸ் நிறுவனம், உள்ளூர் மற்றும் தஞ்சாவூர், கும்பகோணம், ஈரோடு, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு நகரங்களிலிருந்தும், கரூர், திருச்சி மாவட்டங்களில் உள்ள காகித ஆலைகளிலிருந்தும் பெறப்படும் மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுப் பொருட்கள், மட்காத நெகிழி உள்ளிட்ட கழிவுப் பொருட்களை வாங்கி, சிமென்ட் சூளைகளில் மாற்று எரிபொருளாகவும், மாற்று மூலப்பொருளாக வும் பயன்படுத்தி வருகிறது. இதன் மூலம் அதன் எரிபொருள் தேவையில் நான்கில் ஒரு பங்கை (25 சதவீதம்) பெற்றுள்ளது.

இந்நிறுவனம் கார்பன் டைஆக் சைட் உமிழ்வை ஆண்டுக்கு 2,250 டன் வெற்றிகரமாக குறைத்துள்ளது. மேலும், கழிவுப் பொருட்கள் பெறப்படும் பகுதிகளில் உள்ள திறந்தவெளி குப்பை கிடங்குகளின் பளு குறைவதுடன், அப்பகுதிகளின் காற்று, மண் மாசுபாடும் குறைகிறது.

2003-ம் ஆண்டிலிருந்து தொடங் கிய மாற்று எரிபொருள் மற்றும் மூலப்பொருட்கள்(ஏஎஃப்ஆர்) தொழில்நுட்பத்தை தொடக்கத்தில் ஏற்றுக்கொண்ட சிமென்ட் நிறுவனங்களில் இந்நிறுவனமும் ஒன்றாகும். மாற்று எரிபொருட்களின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்ட முதலீடுகளின் விளைவாக ரெட்டிபாளையம் சிமென்ட் நிறுவனம் நடப்பாண்டில் 25 சதவீதத்துக்கும் அதிகமான நிலையான வெப்ப மாற்று விகிதத்தை அடைந்துள்ளது. நிதியாண்டு 2020-ல் அல்ட்ராடெக் நிறுவனம் தனது சிமென்ட் தயாரிப்பு தேவையான மூலப்பொருள் தேவையில் 17.2 சதவீதத்தையும், வெப்ப எரிபொருள் தேவையில் 3.7 சதவீதத்தையும் மாற்று வளங்களின் மூலம் பூர்த்தி செய்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்