திருப்பத்தூர் மாவட்டம் எழில் நகர் குடியிருப்பு பகுதியில் தற்காலிக கட்டிடத்தில் ‘மாவட்ட தொழில் மையம்’ திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில், திருப்பத்தூர் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளர் ரவி வரவேற்றார். சட்டப்பேரவை உறுப்பினர்கள் நல்லதம்பி (திருப் பத்தூர்), வில்வநாதன் (ஆம்பூர்) தேவராஜ் (ஜோலார்பேட்டை) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா தலைமை வகித்து, திருப்பத்தூர் மாவட்டத்துக்கான ‘மாவட்ட தொழில் மையத்தை’ குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார். அப்போது, அவர் பேசும்போது, ‘‘திருப்பத்தூர் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் புதிய தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டு திட்டம் செயல்படுத்தப் படும். பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ படித்த முதல் தலைமுறை இளைஞர்களுக்கு உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க தமிழக அரசின் மானியத்துடன் ரூ.5 கோடி வரை வங்கி கடன் பெற நடவடிக்கை எடுக்கப்படும்.
21 வயது முதல் 35 வயது வரையுள்ள ஆண், பெண், பழங்குடியினர், முன்னாள் ராணு வத்தினர், மாற்றுத்திறனாளிகள், பட்டப்படிப்பு, டிப்ளமோ மற்றும் ஐடிஐ படித்தவர்கள் தொழில் தொடங்க கடன் உதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். தனி மனித நிதி ஆதாரங்களை கணக்கீடு செய்து தொழில் தொடங்க கடன் வழங்கப்படுகிறது.
அதன்படி, தோல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி, அகர்பத்தி உற்பத்தி, இயந்திர மயமாக்கப்பட்ட செங்கல் தயாரிப்பு, உணவு பொருள் பதப்படுத்தும் தொழில்கள், பழங்களை உலர வைத்தல், மருந்துப்பொருட்கள் தயாரித்தல், விளை பொருட்களில் இருந்து எஸென்ஸ் பிரித்தெடுத்தல், வாகன உதிரிபாகங்கள் தயாரித்தல், ஏற்றுமதி தரத்தில் மரபர்னீச்சர் தயாரித்தல், ஆயத்த ஆடைகள் தயாரித்தல், மின் மற்றும் மின் அணுசாதனங்கள் தயாரித்தல், கண்ணாடி பிரேம்கள் மற்றும் லென்சுகள் தயாரித்தல் ஆகிய தொழில்கள் தொடங்கலாம்.
ஆகவே, திருப்பத்தூர் மாவட் டத்தில் உள்ள தொழில் தொடங்க ஆர்வமுள்ள இளைஞர்கள் திருப் பத்தூர் எழில் நகர், எண்:86ல் செயல்பட்டு வரும் மாவட்ட தொழில் மைய அலுவலகத்தில் நேரிலோ அல்லது 01479-299099 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொண்டு பயன் பெறலாம்’’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago