கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் - நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கு அனுமதி : சமூக இடைவெளியை கடைபிடிக்க அறிவுறுத்தல்

கடலூர் அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடைபயிற்சி, விளையாட்டு பயிற்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கரோனா பரவலை தடுக்கும் வகையில் கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் மூடப்பட்டது.கடந்த சில மாதங்களாக பொதுமக்களை அனுமதிக்காததால் விளையாட்டு மைதானம் உருக்குலைந்து பயன்படுத்த முடியாதநிலையில் இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்டவிளையாட்டு அலுவர் சிவா உத்தரவின்பேரில் மைதானத்தில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

இதனை தொடர்ந்து நேற்று காலை நடைபயிற்சி செய்வோர், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள், உடற்பயிற்சியில் ஈடுபவர்கள் ஆகியோர் மைதானத்திற்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதில் தடகள, டென்னிஸ், வாலிபால், பேட்மின்டன் ஆகிய பயிற்சிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நீச்சல் மற்றும் உள் விளை யாட்டரங்கில் நடைபெறும் பயிற்சிகளுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. பொது மக்கள், விளையாட்டு வீரர்கள் சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும் பாதுகாப்பாக பயிற் சியை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவா தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்