குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் சிறையிலடைப்பு :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்டம் வி.கே.புரம் போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட வி.கே.புரம் மேட்டுதங்கம்மன் கோயில் தெருவை சேர்ந்த சுரேஷ் (39), ஜார்ஜ்புரம் தெற்குதெரு சுதாகர் (42) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நெ. மணிவண்ணன் பரிந்துரை செய்தார்.

மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணுவின் உத்தரவின்பேரில் சுரேஷ், சுதாகர் ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதுபோல சிவந்திப்பட்டி பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்ட சிவந்திப்பட்டி கார்மேகனார் தெருவைச் சேர்ந்த ராஜா (58) என்பவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நெடுங்குளம் வடக்கு காலனியைச் சேர்ந்தவர் பவுன்ராஜ் என்ற ஆறுமுகம். இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தொடர்ந்து குற்றச் செயல்களில் ஈடுபட்டதால் பவுன்ராஜ் என்ற ஆறுமுகம் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க தென்காசி ஆட்சியருக்கு எஸ்பி கிருஷ்ணராஜ் பரிந்துரை செய்தார்.

ஆட்சியர் கோபால சுந்தரராஜ் உத்தரவின்பேரில் பவுன்ராஜ் என்ற ஆறுமுகம் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்