4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல் :

By செய்திப்பிரிவு

அதன்படி, நேற்று காலை சோமநாயக்கன்பட்டி ரயில் நிலையத்தில் வருவாய்த் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கிருந்து புறப்பட்ட பெங்களூரு பாசஞ்சர் ரயிலில் சில மர்ம நபர்கள் ரேஷன் அரிசி மூட்டைகளை ஏற்றினர். அதிகாரிகள் வருவதற்குள்ளாக அந்த ரயில் அங்கிருந்து புறப்பட்டுச்சென்றது. உடனே, வட்ட வழங்கல் அலுவலர் நடராஜன் தலைமையில் உதவியாளர்கள் கிருஷ்ணன் மற்றும் அருள்பாண்டியன் ஆகியோர் தங்களது வாகனத்தில் ரயிலை பின் தொடர்ந்து சுமார் 15 கி.மீ., தொலைவுக்கு சென்றனர். அப்போது, பாசஞ்சர் ரயில் பச்சூர் ரயில் நிலையத்தை அடைந்தது.

உடனே, அங்கு சென்ற வருவாய்த் துறையினர் அந்த ரயிலில் ஏறி கழிப்பறை மற்றும் பயணிகள் இருக்கைக்கு அடியில் பதுக்கி வைத்திருந்த சுமார் 3.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். அதேபோல, பச்சூர் ரயில் நிலையத்தில் கடத்துவதற்காக முட்புதர்களில் வைத்திருந்த 1 டன் ரேஷன் அரிசியையும் வருவாய்த் துறையினர் கைப்பற்றி திருப்பத்தூர் நுகர்பொருள் வாணிபக்கிடங்கில் ஒப்படைத்தனர். இதுகுறித்து வருவாய்த் துறையினர் நாட்றாம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்