தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு முன்னாள் எம்.எல்.ஏ. பாலபாரதி எழுதிய கடிதம்:
முதல் அலையில் சிகிச்சை அளிக்க தயங்கிய தனியார் மருத்துவமனைகள் கரோனா 2-வது அலையின்போது அரசின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டதால் சிகிச்சை அளிக்க முன்வந்தன. இதில் சில மருத்துவமனைகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டன. ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை மருந்து மற்றும் மருத்துவமனைக் கட்டணமாக வசூலிப்பது கொடுமையான செயல். மேலும் தனியார் மருத்துவமனைகளில் கரோனா உயிரிழப்பும் அதிகம். அதிக கட்டணத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்கள் நிலைகுலைந்துள்ளன. எனவே, தனியார் மருத்துவமனைகளின் செயல்பாடுகளைக் கண்காணித்து காப்பீட்டுத் திட்டத்துக்குத் தேர்வு செய்யப்பட்ட மருத்துவமனைகளை ஆய்வு செய்து, தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago