முன்னாள் அமைச்சர் மணிகண் டனுக்கு சிறையில் சொகுசு வசதிகள் செய்து தரப்படவில்லை என சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் செய்தியாளர் களிடம் நேற்று அவர் கூறியதா வது: முன்னாள் அமைச்சர் மணி கண்டன் சொகுசு வசதியுடன் சைதாப்பேட்டை சிறையில் தங்கியிருப்பதாகக் கூறும் தகவல் தவறானது. அவர், சில நாட்களுக்கு முன்பே புழல் சிறைக்கு மாற்றப்பட்டுவிட்டார்.
விராலிமலை அருகே சித்துப் பட்டியில் ஏற்கெனவே ஒன்றியக் குழுத் தலைவரால் திறந்து வைக்கப்பட்ட நேரடி நெல் கொள் முதல் நிலையத்தை முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் 2 தினங் களுக்கு முன்பு மீண்டும் திறந்து வைத்துள்ளார்.
கடந்த ஆட்சியில் திருமயம் தொகுதியில் நடைபெற்ற சைக்கிள் வழங்கும் விழாவுக்கு எம்எல்ஏ என்ற முறையில் சென்ற என்னை மேடை ஏற விடாமல் கீழே பிடித்து தள்ளிவிட்டு, என் மீதே வழக்கு பதிவு செய்தார்கள். இதுபோன்று, அதிமுக ஆட்சியில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கு செய்த ஜன நாயகக் கொடுமைகளை திமுக ஆட்சியில் செய்ய மாட்டோம் என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago