வருவாய் ஈட்டும் நபர் கரோனாவால் உயிரிழப்பா? - ‘ஸ்மைல்’திட்டத்தின் கீழ் மானியத்துடன் கடனுதவி :

தென்காசி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கரோனா பாதிப்பால் உயிரிழந்திருந்தால், அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ‘SMILE’ என்ற கடன் திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோரின் குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும். குடும்ப வருமானம் ஈட்டக்கூடிய நபரின் வயது18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும். இத்திட்டத்தில் அதிகபட்சமாக திட்டத்தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத்தொகையில் 80 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப்படும். மீதமுள்ள 20 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை மானியம் வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம்வட்டி விகிதத்தில் கடன் தொகைவழங்கப்படும். குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடியவர் கரோனா வைரஸால் உயிரிழந்தார் என்பதற்கான ஆவணங்களுடன் தென்காசி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளதென்காசி மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலஅலுவலர் அலுவலகத்தை நேரடியாக அல்லது 9710264879 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

ஆதிதிராவிட மக்களுக்கு உதவி

இதேபோல இந்து ஆதிதிராவிடர் இனத்தவரின் குடும்பத்தில் வருமானம் ஈட்டக்கூடிய நபர் கரோனா பாதிப்பால் உயிரிழந்தால், அவரதுகுடும்ப வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசியபட்டியலினத்தோர் நிதி மேம்பாட்டுக் கழகம் மூலம் ‘ஆஷா’ என்றதிட்டத்தின் கீழ் தொழில் செய்வதற்கு கடன் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயனடைய விரும்புவோர் விண்ணப்பங்களை மாவட்டமேலாளர், தாட்கோ, ஏ.ஆர்.லைன்ரோடு, பாளையங்கோட்டை, திருநெல்வேலி-627 002 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும்விவரங்களுக்கு திருநெல்வேலி தாட்கோ மாவட்ட மேலாளரை0462-2561012, 2902012, 9445029481 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்