பொதுப்பணித் துறைக்கான பொது நிர்வாகப் பிரிவை உருவாக்கி, துறையின் செயலர் சந்தீப் சக்சேனா உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.
அதில், "பொது நிர்வாகப் பிரிவு, முதன்மை தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) கட்டுப்பாட்டின்கீழ் செயல்படும். புதிய வேலைவாய்ப்பு, காலி பணியிடங்களைக் கண்டறிந்து அறிக்கை தயாரிப்பது, சீனியாரிட்டி பட்டியல் தயாரிப்பது, பதவி உயர்வு, பணியிட மாற்றம், ஊதிய நிர்ணயம், ஒழுங்கு நடவடிக்கை, ஓய்வு பெறுவோர் மற்றும் ஓய்வூதியம் தொடர்பான அறிக்கை தயார் செய்வது உள்ளிட்ட பணிகளை அவர் மேற்கொள்வார்" என்று கூறப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago