தமிழகத்தில் கரோனா ஊரடங்கு தளர்வுகளுக்குப் பிறகு திண்டுக்கல் மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து மாவட்டத்துக்குள் இயங்கும் நகரப் பேருந்துகள் மற்றும் தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் இயக்கப்பட்டன. கரூர், திருப்பூர், ஈரோடு, கோயம்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்குப் பொதுப்போக்குவரத்து தடை செய்யப்பட்டதால் அப்பகுதிக்குச் செல்லும் சாலைகளில் திண்டுக்கல் மாவட்ட எல்லை வரை மட்டுமே பேருந்துகள் இயக்கப்பட்டன.
கொடைக்கானல் உள்ளிட்ட மலைப் பிரதேசங்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு தற்போது வரை தடை நீடித்து வரும்நிலையில் நேற்று பேருந்துகள் இயக்கப்பட்டன.
கொடைக்கானலுக்கு அவசர மற்றும் மருத்துவத் தேவைகளுக்கு இ- பாஸ் பெற்று மட்டுமே பயணிக்க முடியும் என்ற நிலை தொடர்கிறது. சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வருவதை தடுக்கும்விதமாக பேருந்துகளில் கொடைக்கானல் செல்லும் வெளிமாவட்ட பயணிகளுக்கு கொடைக்கானல் டோல்கேட் அருகே அமைக்கப்பட்ட மருத்துவமுகாமில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
இ- பாஸ் இன்றி காரில் கொடைக்கானல் செல்லும் வாகனங்கள் மலையடிவாரத்திலேயே சோதனைச்சாவடியில் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பி வைக்கப்படுகின்றன. பழநி பேருந்துநிலையத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் நீண்டநேரம் காத்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago