காரைக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத்திறன் மா ணவரை சேர்க்க மறுத்த நிலையில், முதன்மைக் கல்வி அலுவலரின் உத்தரவால் மாணவரைச் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுப் பள்ளிகளில் ஜூன் 14-ம் தேதி முதல் மாணவர்கள் சேர்க்கை நடந்து வருகிறது. மேலும் எந்தக் காரணத்துக்காகவும் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை மறுக்கக் கூடாது.
மாற்றுச்சான்று இல்லா விட் டாலும் எமிஸ் எண் மூலம் மாணவர்களைச் சேர்க்க நட வடிக்கை எடுக்க வேண்டுமென பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட் டுள்ளது.
காரைக்குடி பாண்டியன் நகரைச் சேர்ந்த செல்வம் மகன் யோகேஷ். மாற்றுத்திறனாளி மாணவரான இவர் காரைக்குடி முத்துப் பட்டணம் மு.வி. அரசு மேல்நிலைப் பள்ளி யில் 10-ம் வகுப்புப் படித்தார்.
தேர்ச்சி அடைந்தநிலையில் அதே பள் ளியில் பிளஸ் 1-க்கு விண்ணப்பித்தார். ஆனால், அவ ரைச் சேர்க்க பள்ளி நிர் வாகம் மறுத்துவிட்டது.
இதையடுத்து மாற்றுத்திற னாளிகள் சங் கத்தினர் சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலரிடம் புகார் தெரிவித்தனர்.
இதுகுறித்து முதன்மைக் கல்வி அலு வலர் பாலுமுத்து கூறுகையில், ‘அரசுப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை மறுக்க முடியாது.
புகார் வந்ததும் உடனடியாக மாற்றுத்திறனாளி மாணவரை அதே பள்ளியில் சேர்க்க உத்தர விட்டுள்ளேன்,’ என்றார்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago