மதுபோதையில் ஆட்டோ ஓட்டுநரிடம் தகராறு செய்தபோது, விசாரிக்க வந்த காவல் ஆய்வாளர் மற்றும் காவலர்களை ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்த 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பத்தூர் வீட்டு வசதிவாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் (52) இவர், திருப்பத்தூர் பழைய பேருந்து நிலையம் அருகே சவாரிக்காக காத்திருந்தார்.
அப்போது, திருப்பத்தூர் அடுத்த பெரியகரம் பகுதியைச் சேர்ந்த நரசிம்மன்(52), பாலாஜி (34), ரமேஷ் (32) மற்றும் புருஷோத்தமன் (30) ஆகியோர் மதுபோதையில் அங்கு வந்து சவாரிக்காக பெரியகரம் செல்ல வேண்டும் எனக்கேட்டு பேரம் பேசினர்.
அப்போது, 4 பேரும் மதுபோதை யில் இருந்ததால் ஆட்டோவில் ஏற்ற முடியாது என ரமேஷ் கூறியதாக தெரிகிறது. இதனால், ஆத்திரமடைந்த 4 பேரும் ஒன்று சேர்ந்து ஆட்டோ ஓட்டுநர் ரமேஷை சரிமாரியாக தாக்கினர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவலறிந்த திருப்பத் தூர் நகர காவல் ஆய்வாளர் பேபி மற்றும் காவலர்கள் அங்கு சென்று 4 பேரையும் விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச்சென்றனர். அப்போது போதையில் நிற்கக்கூட முடியாமல் தடுமாறிய அவர்கள் 4 பேரும் காவலர்களை ஆபாசமாக பேசி அவர்களை மிரட்டினர். இந்த காட்சி சமூக வலை தளங்களில் பரவி வைரலானது.
இதுகுறித்து ஆட்டோ ஓட்டுநர் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து போதையில் இருந்த 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago