‘மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக : சேவை செய்தவர்களுக்கு விருது’ :

By செய்திப்பிரிவு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவை செய்தவர்களுக்கான விருதை பெற நாளை (30-ம் தேதி) மாலை 5.45 மணிக்குள் விண்ணப் பிக்க வேண்டும் என தி.மலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாற்றுத்திறனாளிகள் நலனுக் காக மாநில அளவில் சிறப்பாக செயல்பட்டவர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்து சுதந்திர தின விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த தொண்டு நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த மருத்துவர், மாற்றுத்திறனாளிகளுக்கு மிக அதிகளவில் வேலைவாய்ப்பு அளித்த தனியார் நிறுவனம், மாற்றுத் திறனாளிகளுக்கு சேவை புரிந்த சிறந்த சமூக பணியாளர் மற்றும் சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி என 5 வகைகளாக விருது கள் வழங்கப்படவுள்ளன.

இந்த விருதுகளுக்கு 10 கிராம் தங்கம், சான்றிதழ் வழங்கப் படவுள்ளது. சிறந்த தொண்டு நிறுவனத்துக்கு கூடுதலாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும். விருது களுக்கான விண்ணப்பத்தை “மாற்றுத்திறனாளிகள் நல ஆணையர், மாற்றுத்திறனாளிகள் நல ஆணை யரகம், எண் 5, லேடி வெலிங்டன் கல்லூரி வளாகம், காமராஜர் சாலை, சென்னை – 5 அல்லது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலரிடம்” பெற்று பூர்த்தி செய்து நாளை (30-ம் தேதி) மாலை 5.45 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும், விண்ணப்ப படிவங் களை https://awards.tn.gov.in என்ற இணையத்தின் வழியாக விண்ணப்பிக்கலாம்” என தெரி வித்துள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்