மாயமான மீனவரை விரைந்து தேட அமைச்சர் மெய்யநாதன் உத்தரவு :

கோட்டைப்பட்டினம் அருகே கடலில் தவறி விழுந்து மாயமான மீனவரை விரைந்து தேட மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் உத்தரவிட் டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் அருகே வடக்கு புதுக்குடி நாட்டுப்படகு மீன்பிடி இறங்கு தளத்தில் இருந்து எம்.தினமணி(46), இவரது மகன் வசீகரன்(19 ), சக்திவேல் மகன் மணிகண்டன்(23) ஆகியோர் நேற்று முன்தினம் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.

வடக்கு புதுக்குடியில் இருந்து 16 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக பட கில் இருந்து வசீகரன் கடலுக்குள் தவறி விழுந்து விட்டார். அவரை சக மீனவர்களும், மீன்வளத் துறையினரும் தேடி வருகின்றனர்.

இந்நிலையில், அவரது குடும் பத்தினரை மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் நேற்று சந்தித்து ஆறுதல் கூறி, ரூ.50,000 நிதியுதவி வழங் கினார்.

அப்போது அவர் கூறும்போது, ‘‘மாயமான மீனவரை தேடும் பணியை துரிதப்படுத்த மீன்வளத் துறை மற்றும் கடலோர பாது காப்பு படையினருக்கு உத்தரவி டப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் ஹெலிகாப்டர் மூலம் தேடவும் அரசு தயாராக உள்ளது’’ என்றார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE