சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக்கு கடனுதவி : தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்

தென்காசி மாவட்ட ஆட்சியர் கோபால சுந்தரராஜ் அறிக்கை: தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன், கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்விக்கடன் திட்டம் ஆகிய திட்டங் கள் செயல்படுத்தப் படுகின்றன.

தனிநபர் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் நகர்ப்புறமாயின் ரூ.1,20,000-க்கு மிகாமலும், கிராமப்புறமாயின் ரூ.98,000-க்கு மிகாமலும் இருக்க வேண்டும். சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் பயன்பெற குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8,00,000-க்கு மிகாமல் இருக்க வேண்டும். தனிநபர் கடன் ஆண்டுக்கு 6 சதவீத வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.20,00,000, சுயஉதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் திட்டத்தின் கீழ் ஆண்களுக்கு 8 சதவீதம், பெண்களுக்கு 6 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.30,00,000 வரை வழங்கப்படுகிறது.

கைவினை கலைஞர்களில் ஆண்களுக்கு 5 சதவீதம், பெண்களுக்கு 4 சதவீதம் வட்டி விகிதத்தில் அதிகபட்ச கடனாக ரூ.10,00,000 வழங்கப்படுகிறது. சுய உதவிக் குழு கடன் நபர் ஒருவருக்கு ரூ.1,00,000 ஆண்டுக்கு 7 சதவீதம் வட்டி விகிதத்திலும் கடன் வழங்கப்படுகிறது. சிறு பான்மை மாணவ, மாணவிகள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலைய ங்களில் இளநிலை, முதுநிலை தொழிற்கல்வி, தொழில்நுட்பக் கல்வி பயின்றால் கல்வி கடனுதவி வழங்கப்படுகிறது.

எனவே, தென்காசி மாவட்டத்தில் வசிக்கும் கிறிஸ்தவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையின மக்கள் கடன் விண்ணப்பங்களை https://tenkasi.nic.in/forms என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, அதனை பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தென்காசி-627811 என்ற முகவரிக்கு அஞ்சல் வழியாக சமர்ப்பிக்கலாம். இத்திட்டம் தொடர்பான விவரங்களுக்கு மாவட்ட பிற் படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை 9710264879 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நாட்களில் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்