உயிர் உர உற்பத்தி மையத்தில் ஆய்வு :

கடலூர் செம்மண்டலத்தில் செயல்பட்டு வரும் உயிர் உர உற்பத்தி மையத்தை கடலூர் மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப்ரமணியம் பார்வையிட்டு உயிர் உர உற்பத்திசெய்யும் வழிமுறைகளை கேட்டறிந்தார். மாவட்ட வேளாண்இணை இயக்குநர் தி.சு. பாலசுப்ரமணியம் உயிர் உரங்களை விவசாயிகளுக்கு மானிய திட்டங்களின் கீழ் வழங்கபடுவது குறித்து ஆட்சியருக்கு விளக்கினார்.

கடலூர் மையத்தில் தயாரிக்கும் திட மற்றும் திரவ உயிர் உரங்களின் வகைகள், அவற்றின் செயல்திறன் மற்றும் பயறுவகை தாவர குடும்ப பயிர்களில் வேர் முடிச்சுகளில் நன்மை செய்யும் ரைசோபியம் பாக்டீரியாக்கள் வளிமண்டல தழைச் சத்தினை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்தி நிலவளத்தை பெருக்குதல், மணிச்சத்து உரத்தை கரைத்து பயிருக்கு அளிக்கும் பாஸ்போ பாக்டீரியா ஆகியன குறித்து விளக்கப்பட்டது.

மேலும், தமிழகத்திலேயே புது முயற்சியாக சாம்பல் சத்தினை பயிர்களுக்கு கரைத் தளிக்கும் பாக்டீரிய திரவ உயிர் உர தயாரிப்பு குறித்தும் விரிவாக விளக்கப்பட்டது. இத்திட்டத்தின் நன்மைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கிடைக்கும் வண்ணம் வேளாண் துறையினர் பணியாற்ற ஆட்சியர் அறிவுறுத்தினார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்