அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கன், பட்டாச்சாரியார்கள், பூசாரி கள் மற்றும் கோயில் பணியாளர் களுக்கு ரூ.4 ஆயிரம் கரோனா உதவித்தொகை, 10 கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயில், தென்காசி காசி விசுவநாத சுவாமி கோயிலில் நடைபெற்றது.
தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் 91 பேருக்கும், சங்கரன்கோவிலில் 205 பேருக்கும் உதவித்தொகை வழங்கப்பட்டது. தென்காசியில் நடந்த நிகழ்ச்சியில் ஆட்சியர் கோபால சுந்தரராஜ், தென்காசி தொகுதி மக்களவை உறுப்பினர் தனுஷ் எம்.குமார் ஆகியோர் உதவித் தொகை வழங்கினர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் பேசும்போது, “இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ள கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணியாற்றும் அர்ச்சகர்கள், பட்டாச் சாரியார்கள், பூசாரிகள் மற்றும் பணியாளர்களுக்கு உதவி த்தொகையாக ரூ.4,000, 10 கிலோ அரிசி மற்றும் 15 வகை மளிகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 296 பேர் பயனடைந்துள்ளனர்” என்றார். சங்கரன்கோவில் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ராஜா, தென்காசி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ்.எஸ்.பழனி கலந்துகொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago