செய்யாறு அடுத்த மோரணம் கிராம ஏரியில் - டெட்டனேட்டர்கள், நாட்டு வெடிகுண்டு கண்டெடுப்பு :

By செய்திப்பிரிவு

செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தில் உள்ள ஏரியில் இருந்து நாட்டு வெடிகுண்டு மற்றும் டெட்டனேட்டர்களை கைப்பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த மோரணம் கிராமத்தில் வசிப்பவர் அர்ஜுனன். இவர், அதே கிராமத்தில் உள்ள ஏரியில் நேற்று முன் தினம் மாலை ஆடுகளை மேய்த்துக் கொண்டி ருந்தார். அப்போது ஏரியில், வெடிக் காத நிலையில் இருந்த 7 டெட்டனேட்டர்கள், ஒரு நாட்டு வெடி குண்டு இருப்பதை கண்டு அதிர்ச்சிஅடைந்துள்ளார். பின்னர், அதனை மறைவான இடத்தில் வைத்துவிட்டு சென்றுள்ளார். இதையடுத்து அவர், கொடுத்த தகவலின் பேரில் ஏரிக்கு நேற்று சென்ற மோரணம் காவல் துறையினர், 7 டெட்டனேட்டர்கள் மற்றும் நாட்டு வெடிகுண்டை கைப்பற்றி பாதுகாப்பாக கொண்டு சென்றனர்.

இது குறித்து அர்ஜுனன் கூறும் போது, “ஏரியில் ஒரு வாரத்துக்கு முன்பு நான், ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். அப்போது பலத்த சத்தம் கேட்டது. ஆடுகள் இருந்த இடத்துக்கு சென்று பார்த்தபோது, தலை சிதறிய நிலையில் ஆடு துடித்துடித்து உயிரிழந்தது. பின்னர், உயிரிழந்த ஆட்டை வீட்டுக்கு கொண்டு சென்றுவிட்டேன். பயத்தில் யாருக்கும் தகவல் தெரிவிக்க வில்லை. மேலும், ஏரி வழியாக சென்றபோது, வெடிகுண்டை மிதித்து பசு மாட்டின் காலில் எலும்பு முறிந்தது.

இந்நிலையில், ஆடுகளை நேற்று (நேற்று முன்தினம்) மேய்ச்சலுக்கு விட்டிருந்தபோது, 7 டெட்டனேட்டர்கள் இருந்தன. அவை அனைத்தும் வெடிக்கா தவை. மேலும், அந்த பகுதியில்வேறு வெடி பொருள் இருக்கிறதா?என தேடியபோது, வெடிக்காத நிலையில் ஒரு நாட்டு வெடி குண்டும் இருந்தது. அதனை, கால்நடைகள் மிதித்துவிடக் கூடாது என்பதற்காக, மறைவான இடத்தில் வைத்துவிட்டு சென்று விட்டேன். பின்னர், கிராம மக்கள் மூலம் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தேன். காட்டுப் பன்றிகள் நடமாட்டம் இருப்பதால், அதனை வேட்டையாட டெட்டனேட்டர்கள், நாட்டு வெடிகுண்டுகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

காட்டுப்பன்றிகளை வேட்டை யாட பழங்களில் வெடிகளை திணித்து வைத்துவிட்டு சென்று விடுகின்றனர். அந்த பழங்களை ஆடு மற்றும் மாடுகள் உட்கொள்ளும்போதும் மற்றும் மிதிக்கும்போது, ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றன. இது போன்ற சம்பவங்கள் தொடர்கிறது. கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடப்படும் பகுதியில் வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை வைத்துவிட்டு செல் லும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

இது குறித்து மோரணம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நாட்டு வெடிகுண்டு மற்றும்டெட்டனேட்டர்களை பயன்படுத் தியது யார்? அவர்களுக்கு விற்பனை செய்தவர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்