ஜூன் மாதம் மின்கட்டண கணக்கீடு : வழிமுறைகள் குறித்து மின்வாரியம் அறிவிப்பு :

ஈரோடு: ஜூன் மாத மின்கட்டணத்தை கணக்கீடு செய்து செலுத்துவது குறித்து ஈரோடு மின்வாரியம் வழிமுறைகளை அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஈரோடு மின் பகிர்மான மேற்பார்வைப் பொறியாளர் இந்திராணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு

கரோனா ஊரடங்கு காரணமாக வீடுகள் இதர தொழில்நிறுவனங்களில் மின்வாரிய மின் கணக்கீட்டாளர்கள், ஜூன் மாத மின் கணக்கீடு செய்ய நேரில் செல்ல இயலாத நிலையில் உள்ளது. எனவே, வீடு, நுகர்வோரே தங்களது மின் பயன்பாட்டை (மின்சார மீட்டரை) புகைப்படம் எடுத்து வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பும் பட்சத்தில், அதற்கான மின் பயன்பாடு கணக்கீடு செய்யப்பட்டு, மின்கட்டணம் மொபைல் எண்ணுக்கு அனுப்பி வைக்கப்படும்.

அல்லது, கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் மாதம் அல்லது 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாத மின் கட்டணத்தொகையை, உத்தேச தொகையாக செலுத்தலாம். அவ்வாறு வசூலிக்கப்படும் கட்டணம் எதிர்வரும் ஆகஸ்டு 2021 மாத மின் கட்டணத்தில் சரி செய்யப்படும்.

மின் கட்டணம் அறிய, மின் மீட்டரை புகைப்படம் எடுத்து 9445851912, 9442591822, 9445852180, 9445852190, 9445852150, 9944620145, 9994456233, 9445851900 என்ற எண்களுக்கு வாட்ஸ் அப் அனுப்பலாம்.

மேலும் திருத்தியமைக்கப்பட்ட மின் கணக்கீட்டினை www.tangedco.gov.in என்ற இணையதளத்தில், Consumer Ledger Reading Details பகுதியில் நுகர்வோர்கள் அறிந்து கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளார்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE