புதுக்கோட்டை மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர், மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் பிரிவில் கரோனா தொற்றால் இறந்தவர்களின் குடும்பத்தினருக்கு கடனுதவி செய்யப்படும் என ஆட்சியர் கவிதா ராமு தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பு: புதுக் கோட்டை மாவட்டத்தில் கரோனா பாதிப்பால் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் குடும்பத்தில் வருமானம் ஈட்டக் கூடிய நபர் உயிரிழந்திருந்தால் அவர்களது குடும்பத்தின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் தேசிய பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார வளர்ச்சிக் கழகம் ‘ஸ்மைல்’(SMILE) எனும் கடன் திட்டத்தை செயல்படுத்த உள்ளது.
குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண் டும். குடும்ப வருமானம் ஈட்டக் கூடிய நபரின் வயது 18 முதல் 60-க்குள் இருக்க வேண்டும்.
பழைய, புதிய தொழிலுக்கு அதிகபட்சமாக திட்டத் தொகை ரூ.5 லட்சம் வரை இருக்கலாம். திட்டத் தொகையில் அதிகபட்சமாக ரூ.4 லட்சம் வரை கடன் வழங்கப் படும். மீதமுள்ள ரூ.1 லட்சம் மானியமாக வழங்கப்படும். ஆண்டுக்கு 6 சதவீதம் வீதம் வட்டி கணக்கிடப்படும்.
இந்த திட்டத்தில் பயன் பெற விரும்புவோர், வருமானம் ஈட்டக் கூடியவர் கரோனா பாதிப்பால் உயிரிழந்ததற்கான ஆவணங் களுடன் ஆட்சியர் அலுவலகத் தில் செயல்படும் மாவட்ட பிற்படுத் தப்பட்டோர் நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago