மேலநீலிதநல்லூர் - ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பெண்கள் முற்றுகை :

சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடி ஊராட்சிக்கு உட்பட்ட மகேந்திரவாடி, புதுக்குளம், ராயபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்கள் நூறுநாள் வேலைத் திட்டத்தில் பணிபுரிகிறார்கள். இத்திட்டத்தின் பொறுப்பாளராக திமுக பிரமுகரின் உறவினரை நியமித்ததைக் கண்டித்து, ஏராளமான பெண்கள் மேலநீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.

நூறு நாள் வேலைத்திட்ட பணித்தள பொறுப்பாளராக பெரும்பாலும் பெண்கள் நியமிக்கப்பட்டு வரும் நிலையில், இப்பகுதியில் ஆண் ஒருவரை நியமித்துள்ளதாகவும், தகாத வார்த்தைகளால் பெண்களை அவர் திட்டுவதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் புகார்தெரிவித்தனர். மேலும், பணித்தளபொறுப்பாளராக நியமிக்கப்படுபவர் குறைந்தது 50 நாட்கள் வேலைதிட்டத்தில் வேலை செய்ய வேண்டும் என்ற விதியும் உள்ளது. ஆனால், அந்த விதியை பின்பற்றாமல் திமுக பிரமுகரின் உறவினரை பொறுப்பாளராக நியமித்துள்ளதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டினர். இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்ததை அடுத்து, பெண்கள் கலைந்து சென்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இன்றைய செய்தி

2 years ago

மேலும்