போளூரில் 2 வீடுகளில் பதுக்கி வைத்திருந்த மூன்றரை கிலோ கஞ்சாவை தனிப்படை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் மாட்டுப்பட்டு தெருவில் வசிப்பவர் சீனுவாசன்(47). இவர், தனது வீட்டில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வந்தார்.
இதையறிந்த, போளூர் துணை காவல் கண்காணிப்பாளர் அறிவழகன் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் நேற்று முன்தினம் நடத்திய சோதனையில் 2 கிலோ 250 கிராம் கஞ்சா சிக்கியது. இது குறித்து போளூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சீனுவாசனை கைது செய்தனர்.
மேலும், போளூர் – செங்கம் சாலையில் அல்லி நகர் நடேசன் தெருவில் வசிக்கும் செல்வி(34) என்பவரது வீட்டில், தனிப்படை காவல்துறையினர் நடத்திய சோதனையில் 1 கிலோ 250 கிராம் கஞ்சா மற்றும் 30 லிட்டர் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது.
இது குறித்து கலசப்பாக்கம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து செல்வியை கைது செய்தனர். இரண்டு வழக்கு களிலும் மூன்றரை கிலோ கஞ்சா மற்றும் 30 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago