அதிகபட்ச அளவாக - சோளிங்கரில் 84 மி.மீ மழை பதிவு :

ஒருங்கிணைந்த வேலூர் மாவட் டத்தில் அதிகபட்ச அளவாக சோளிங்கரில் 84 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

வேலூர் மற்றும் ராணிப் பேட்டை மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. வெப்பச்சலனத்தின் காரண மாக பெய்து வரும் திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சிய டைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்தது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று காலை 8 மணி நிலவரப்படி அதிகபட்சமாக சோளிங்கரில் 84 மி.மீ மழை பதிவாகி இருந்தது. வேலூர் மாவட்டத்தில் அதிகபட்ச மாக பொன்னையில் 47.2 மி.மீ மழை பதிவாகி இருந்தது. அதேபோல், வேலூர் 10.3, காட்பாடி 24, குடியாத்தம் 2, மேல்ஆலத்தூர் 5.8, வேலூர் கூட்டுறவு சர்க்கரை ஆலை பகுதியில் 24, வாலாஜாவில் 34.5, அரக்கோணம் 14.6, ஆற்காடு 18, காவேரிப்பாக்கம் 68 மி.மீ மழை பதிவாகி இருந்தது. வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டங்களில் நேற்று காலை முதல் பிற்பகல் வரை வெயிலின் தாக்கம் குறைவாகவே இருந்தது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் நாட்றாம்பள்ளி, கேத்தாண்டப் பட்டி, திருப்பத்தூர் ஆகிய பகுதிகளிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ததால் சாலைகளில் வெள்ளம் பெருக் கெடுத்து ஓடியது. ஒரு சில பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மின் நிறுத்தம் செய்யப்பட்டது.

நேற்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் வருமாறு:

திருப்பத்தூர் 5.1 மி.மீ., ஆலங் காயம் 12.2, நாட்றாம்பள்ளி 3.2, கேதாண்டப்பட்டி 15 என மொத்தம் 35.5 மி.மீ., மழையளவு பதிவாகியிருந்தது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE