விழுப்புரம் மாவட்டத்தில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இலவச பாடபுத்தகங்களை ஆட்சியர் மோகன் நேற்று வழங்கினார். அப்போது அவர் கூறியது:
விழுப்புரம் மாவட்டத்தில் 998தொடக்கப் பள்ளிகள், 252 நடுநிலைப் பள்ளிகள், 141 உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் 143 மேல்நிலைப் பள்ளிகள் என மொத்தம் 1, 534 பள்ளிகள் உள்ளன. இவைகளில் 1 முதல் 12-ம் வகுப்பு வரை தமிழ் வழியில் பயிலும் 1,63, 881 மாணவ, மாணவிகளுக்கும் மற்றும் ஆங்கில வழியில் பயிலும் 49, 650 மாணவ மாணவியர்களுக்கும் என மொத்தம் 2,13, 531 மாணவ மாணவியர்களுக்கு இலவச பாடபுத்தகங்கள் வழங்கப் படவுள்ளன.
சமூக இடைவெளியினை பின்பற்றி பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு ஒவ்வொரு வகுப்பு வாரியாக நாள் மற்றும் நேரம் ஒதுக்கீடு செய்து எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் பாடபுத்தக்கங்களை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்தவொரு மாணவ, மாணவியரும் விடுபடாத வகையில் பாடபுத்தக்கங்கள் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணப்ரியா, முதன்மைக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் காளிதாஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago