அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்யத் தொடங்கியது.
இதில், திருமானூர் பகுதியில் 4 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழை காரணமாக தெருக்களில் தாழ்வான பகுதி களிலும், வயல்களிலும் தண்ணீர் தேங்கியது.
வாய்க்கால்கள், ஓடைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மின் விநியோகம் முற்றிலும் தடைபட்டு, காலை 5 மணிக்கு சரிசெய்யப்பட்டது.
தொடர்ந்து, நேற்று மாலை 4 மணிக்கு மேல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட் டது.
நேற்று காலை 8 மணி வரையிலான 24 மணிநேரத்தில் திருமானூரில் 11.3 செ.மீ, செந்துறையில் 4.6 செ.மீ, அரிய லூரில் 2 செ.மீ மழை பதிவானது.
முக்கிய செய்திகள்
இன்றைய செய்தி
2 years ago